தாயை தாக்கிய மகன் கைது

பாளையங்கோட்டை அருகே தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தாயை தாக்கிய மகன் கைது
Published on

பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவருடைய மகன் ஜஸ்டின் கோபிநாத் (33). இவர் ராணியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ராணி பணம் கொடுக்காததால் அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராணி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜஸ்டின் கோபிநாத்தை நேற்று கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com