சூரசம்ஹார விழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தூத்துக்குடி கலெக்டர் ஆய்வு

குலசேகரன்பட்டினத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள், மதுரை மாநகரைச் சேர்ந்த எஸ்.பி.க்கள், துணை கமிஷனர் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சூரசம்ஹார விழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தூத்துக்குடி கலெக்டர் ஆய்வு
Published on

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.பி.க்கள்,/ போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 10 ஏ.டி.எஸ்.பி.க்கள், 46 ஏ.எஸ்.பி./ டி.எஸ்.பி.க்கள், 117 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும் போக்குவரத்து வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், இதர துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு, போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலேசனை நடத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com