

சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெருமைக்குரிய இந்திய மருத்துவ விஞ்ஞானியும், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் முதன்மை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன், உலகின் மிகப்பழமையான மற்றும் மிக மதிப்புமிக்க அறிவியல் கழகங்களில் ஒன்றான லண்டன் ராயல் சொசைட்டியின் (Royal Society of London) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் அவர் ஆற்றியுள்ள அசாத்திய பங்களிப்பிற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் இது.
தன் அயராத உழைப்பாலும், நுண்ணறிவாலும் உலக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப்பாடுபடும் உன்னத மருத்துவ விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.