

கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள குவாமகுதா(KwaMakhutha) நகரில், நேற்று இரவு ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீட்டில் விருந்தினர்கள் கூடியிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.