

சென்னை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, தாம்பரம், சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் - தென்காசி சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06123) அக்டோபர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06124) அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06023) அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு போடனூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், போத்தனூர் - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06024) அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.
எர்ணாகுளம் சந்திப்பு - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06056) அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06055) அக்டோபர் 5-ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்.
தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06159) அக்டோபர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.20 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மானாமதுரை - தாம்பரம் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06160) அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06166) வழக்கமாக இயக்கப்படும் நேரம் மற்றும் நிறுத்தங்களுடன் அக்டோபர் 4, 2026 ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06165) வழக்கமான நேரம் மற்றும் நிறுத்தங்களுடன் அக்டோபர் 5, 2026 திங்கட்கிழமை இயக்கப்படும்.
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் இந்த சிறப்பு ரெயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.