தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்ட்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே நிர்வாகம் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக ரெயில்வே தொடர்பான அறிவிப்புகள், அறிக்கைகளை பதிவிட்டு வருகிறது. இந்த சமூக வலைதள பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் இன்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்ட்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம் தெற்கு ரெயில்வேயின் இணையதளம், டுவிட்டர் கணக்கு ஆகியவை வழக்கம்போல் இயங்கி வருவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com