ராயல் சொசைட்டியின் உறுப்பினராக சவுமியா சுவாமிநாதன் தேர்வு - இந்திய கம்யூ. கட்சி வாழ்த்து

ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள டாக்டர் சவுமியா சுவாமிநாதனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வேளாண்மை விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள டாக்டர் சவுமியா சுவாமிநாதனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு, கோவிட் 19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் உலக மக்களுக்கு அறிவியல் ரீதியாக வழிகாட்டிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய, உலகப் புகழ் பெற்ற வேளாண்மை விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகளான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் - லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com