காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு


காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு
x

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், போலீசார் காவல்துறை வாகனங்களை ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேற்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல்துறையின் 31 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 135 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவர் வாகன ஓட்டுநர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டதோடு, வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

1 More update

Next Story