கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

தாமரைக்குளம்:

அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு 18 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைத்திருந்த புனித நீரால் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com