

தஞ்சை,
பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அங்கு உள்ள மகா நந்திக்கு பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடெபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மழை பெய்து வெயில் வெப்பம் தணிந்திடவும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.