தூத்துக்குடியில் 24ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்


தூத்துக்குடியில் 24ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்
x

அடையாள அட்டை பெறுதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைள்/ திருநம்பிகள்/ இடைப்பாலினர்களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை பெறுதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24.6.2025 அன்று நடைபெற உள்ள திருநங்கையர் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைள்/ திருநம்பிகள்/ இடைப்பாலினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story