கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்
Published on

கல்விக்கடன் முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் "சிறப்பு கல்விக் கடன் முகாம்" செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள்

முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட வங்கியின் விண்ணப்பங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து, கடன் வழங்கப்படும். www.vidyalakshmi.co.in இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி கூட்டு கணக்கு பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், சாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல்.

கல்லூரியிலிருந்து பெறப்பட்ட 'போனபைட்' சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com