தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே நாளை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, காட்டாங்கொளத்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4, 4.30, 5, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதே போல, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com