கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு - தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என வல்லூர்நர்கள் எச்சரித்த நிலையில் அவர்களை பாதுகாக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com