

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சார்லபள்ளி - திருவண்ணாமலை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ஜூன் 4 முதல் செப்டம்பர் 24-ந்தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் (17 சேவைகள்) மாலை 5.50 மணிக்கு சார்லபள்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07001) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், ஜூன் 5 முதல் செப்டம்பர் 26-ந்தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (17 சேவைகள்) இரவு 11.10 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (07002) மறுநாள் மாலை 4.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (3-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.