மும்பை - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஆகஸ்டு 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மும்பை - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மும்பை லோக்மான்ய திலக் - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மும்பை லோக்மான்ய திலக்கில் இருந்து ஆகஸ்டு 26 மற்றும் செப்டம்பர் 7-ந் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01161) 3-வது நாள் அதிகாலை 2 மணிக்கு வேளாங்கன்னியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், வேளாங்கன்னியில் இருந்து ஆகஸ்டு 28, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.40 மணிக்கு மும்பை லோக்மான்ய திலக்கை சென்றடைகிறது.

24 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஆகஸ்டு 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com