

விழுப்புரம்,
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, பவுர்ணமியான நாளைமறுநாள்(புதன்கிழமை) விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06130) காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.