குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (11-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறப்பு ரெயில்

யணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 09030) இயக்கப்படுகிறது. வல்சாத்தில் இருந்து ஜூலை 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், 3-வது நாள் காலை 10 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி - மராட்டிய மாநிலம் தஹானு ரோடு இடையே சிறப்பு ரெயில் (09029) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலர் இருந்து ஜூலை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 2.50 மணிக்கு தஹானு ரோடு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநள்ளார், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (11-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com