

சென்னை, -
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06192) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.