வாரணாசி-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட நிலையங்களில் ரெயில் நின்று செல்லும்.
வாரணாசி-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோவிலில் மகா மகோத்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி வாரணாசி- எர்ணாகுளம் இடையே கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் வாரணாசி- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (எண்: 04358) பிப்ரவரி 1-ந் தேதி இரவு 10 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 3-ந் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-வாரணாசி சிறப்பு ரெயில் (எண்: 04357) வருகிற 6-ந் தேதி காலை 3 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

இந்த ரெயில், ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல், நாக்பூர், ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com