சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்கள்: 2,483 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன!

சென்னயில் 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்றும் (10.10.2026) மற்றும் இன்றும் (11.10.2026) நடைபெற்றது.
சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்கள்: 2,483 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன!
Published on: 

சென்னை,

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்றும் (10.10.2026) மற்றும் இன்றும் (11.10.2026) நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்றும் (10.10.2026) மற்றும் இன்றும் (11.10.2026) நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களுக்கு 2,517 படிவம் 6 வழங்கப்பட்டு, அதில் 1,854 படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதலுக்கான படிவம் 7ல் 9 வழங்கப்பட்டு, 9 படிவங்களும் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. திருத்தம் மேற்கொள்வதற்காக 838 வாக்காளர்களுக்கு படிவம் 8 வழங்கப்பட்டு, அதில் 620 படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 3,364 எண்ணிக்கையிலான படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவை வழங்கப்பட்டு, அதில் 2,483 எண்ணிக்கையிலான படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com