ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com