பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறிய இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறிய இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்
Published on

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இலங்கை நாட்டின் அமைச்சரான ஜீவன் தொண்டைமான் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற வர பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த் ஆவார். யார் கஷ்டம் என வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்.தேமுதிக தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை தமிழர்களை வைத்து அனைவரும் அரசியல் செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண யாரும் முன் வரவில்லை எனக்கூறினார். கடந்தமுறை தமிழ்நாடு வந்தபோது முதலமைச்சரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை தொடர்பாக எடுத்துரைத்தேன். கச்சத்தீவு இலங்கை நாட்டிற்குரியது. " என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com