வனப்பகுதிக்குள் சென்று வன்னிஅரசு வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

புலியை வாகனத்தில் துரத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
வன்னிஅரசு
Published on: 

தமிழக வனத்துறைக்குட்பட்ட முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றனர். அப்போது, அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அமைச்சர் வன்னிஅரசு புலிகளைத் துரத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், இந்த வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர் வன்னிஅரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தைக் கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது. மேலும், அமைச்சர் வன்னி அரசின் இந்த சர்ச்சைக்குரிய காணோளி குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா, ”அந்த வீடியோவில் வாகனத்தின் பதிவு எண் தெளிவாகத் தெரிவதாகவும், வனவிலங்கு பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சர்ச்சைக்குப் பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “நான் புலிகள் காப்பகத்திற்குச் சென்றதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. நான் முறையாக அனுமதி பெற்றே சென்றேன். புலியை யாராவது விரட்ட முடியுமா? புலியை நேரில் பார்த்ததும் ஆர்வ மிகுதியால் அதை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காகச் சென்றேன். மற்றபடி நான் விரட்டவில்லை. நான் மக்களை எப்படி நேசிக்கிறேனோ அது போல் விலங்குகள், காடுகள், கடலையும் நேசிப்பவன். எந்த ஒரு விலங்கிற்கும் என்னால் தீங்கு ஏற்படும் எனச் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

X