தேனியில் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் - விவசாயிகள் கவலை

விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுக தொடங்கியுள்ளன.
தேனியில் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் - விவசாயிகள் கவலை
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விளைநிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. அங்கு இரண்டு நாட்களுக்கு முன் கொட்டித் தீர்த்த கனமழையால், பிராதுகாரன்பட்டி பகுதியில் உள்ள காட்டாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர் விளைநிலங்களுக்குள் புகுந்து தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுக தொடங்கியுள்ளன. மழை நீர் இன்னும் வடியாத நிலையில், மேலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் மழை நீரை வெளியேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com