லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.
லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
Published on

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முதல் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. ஆனால் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளதால் ஒரு ஜெனரேட்டர் மூலம் 27 மெகாவாட் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 117.80 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 95 கனஅடியாகவும் இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com