மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை
Published on

சென்னை,

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து 2 பேரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைவதாகவும், வைத்திலிங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29-ந் தேதி முடிவதாகவும் இருந்தது. இந்த 2 பேரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியான அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் (நேற்று) 22-ந் தேதியாகும். வைத்திலிங்கத்தின் காலியிடத்திற்கு தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கே.பி.முனுசாமியின் காலியிடத்திற்கு தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு, சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. தி.மு.க. கட்சி தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்று நடக்கும் வேட்புமனு பரிசீலனையின்போது தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். 27-ந் தேதி (பிற்பகல் 3 மணி) வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். தி.மு.க. கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள 2 வேட்புமனுக்களும் திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு எழாத நிலையில், அவை 2 மட்டுமே ஏற்கப்பட்டு ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர் கனிமொழி ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com