மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்; முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்; முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் கடந்த மார்ச் 23-ந் தேதி மரணம் அடைந்தார். அந்த காலி இடத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளாகிய நேற்று, தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசனிடம் 3 வேட்பாளர்கள் வேட்புமனுவை கொடுத்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்த கே.பத்மராஜன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரைப் புதூரைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூரைச் சேர்ந்த கோ.மதிவாணன் ஆகிய 3 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com