கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி

கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.
கரூரில், மாநில அளவிலான வாலிபால் போட்டி
Published on

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்களுக்கான 4-ம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் திருச்சி, கோவை, சேலம், பொள்ளாச்சி, சென்னை, கரூர் என 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. இதில் நேற்று காலை நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியும், சேலம் அணியும் மோதின. இதில் சேலம் அணி வெற்றி பெற்றது. மாலையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியும், சென்னை அணியும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், பொள்ளாச்சி அணியும் மோதின. இதில் பொள்ளாச்சி அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com