“தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
“தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை
Published on

மதுரை,

முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தினசரி 35 ஆயிரம் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் தற்போது, ஊரடங்கு நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக கூறினார்.

மேலும் கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக ரேஷன் பொருட்களை நேரடியாக பயனாளியின் வீட்டுக்கே கொண்டுசென்று கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பல்வேறு தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு இருப்பதாகவும், அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com