புயல் எதிரொலி: சென்னையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடல்

புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி: சென்னையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடல்
Published on

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும், கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் நகைக்கடைகள் மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார்.

மேலும் மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7,000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com