புயல் எச்சரிக்கை: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்

வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்களை இயக்க என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது
புயல் எச்சரிக்கை: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்
Published on

சென்னை ,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை தற்காலிக புயலாக ('பெங்கல்' புயல்) உருவெடுக்கும். இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி காரைக்காலுக்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்க என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது . நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com