10-ம் வகுப்பு மாணவி கடத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த10-ம் வகுப்பு மாணவி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 14-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மாணவியை பீகாரை சேர்ந்த வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com