அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ஆம் ஆண்டில் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு

விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 13.6.2025.

விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ஆம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461-2340133/9499055810), நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது எனவும், தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story