நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

நாமகிரிப்பேட்டை அருக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

பள்ளி மாணவன்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் யாதேஸ் (வயது 14). இவன் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் யாதேஸ் தனது வீட்டுக்கு அருகே உள்ள பழமையான கிணற்றுக்கு குளிக்க சென்றான்.

அந்த கிணற்றில் தற்பேது அதிகளவில் தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த யாதேஸ் திடீரென நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அந்த சமயம் அந்த வழியாக வந்தவர்கள் மாணவன் நீரில் மூழ்குவதை அறிந்து கிணற்றில் இறங்கி மீட்டனர்.

விசாரணை

இதையடுத்து உடனடியாக மாணவனை சிகிச்சைக்காக தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு யாதேசை பரிசோதனை செய்த டாக்டர் யாதேஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆயில்பட்டி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com