நீட் தேர்வு எழுதச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிய மாணவி; காவல்துறையினர் செய்த செயலால் நெகிழ்ச்சி

சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார், மாணவியை மீட்டு அவருக்கு முதலுவி சிகிச்சை அளித்தனர்.
நீட் தேர்வு எழுதச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிய மாணவி; காவல்துறையினர் செய்த செயலால் நெகிழ்ச்சி
Published on

மதுரை,

நீட் தேர்வு எழுத தந்தையுடன் சென்ற மாணவி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், அவரை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் காவல்துறை சார்பில் வாடகை காரில் தேர்வு எழுத அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நீட்' மறுதேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த வகையில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் (மே) 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததையடுத்து அது விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 'நீட்' மறுதேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 500-க் கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததையடுத்து அது விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 'நீட்' மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி (இன்று) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

தேர்வு தொடங்கியது...

அதன்படி, நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தற்போது நீட் மறுதேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 500-க் கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை தந்த மாணவர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.15 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.

விபத்தில் சிக்கிய மாணவி

அந்த வகையில் நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் மாணவி ஒருவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் மணிகண்டம் அருகே வந்தபோது அம்பேத்கர் நகர் பகுதியில் அவர்களது இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் மாணவிக்கும், அவரது தந்தைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார், மாணவியை மீட்டு அவருக்கு முதலுவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து மாணவியை தேர்வு எழுதுவதற்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com