கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் காதலன் கைது

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி பலாத்காரசெய்த காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டா.
கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் காதலன் கைது
Published on

கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அஜித்(வயது 21). சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவரும் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியும் கச்சிராயப்பாளையம் பள்ளியில் படித்தபோதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அவரிடம் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அஜித் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தார். இதை உண்மை என நம்பி சென்ற மாணவியை அஜித் திருமணம் செய்ய மறுத்ததோடு அவரது பெற்றோருடன் சேர்ந்து திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மேலும் அஜித்தின் தாய், தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com