மாணவி தற்கொலை - கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்....!

மாணவி தற்கொலைக்கு காரணமாவனர்களை கைது செய்ய வலியுறுத்தி கல்லூரி மாணவ -மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டு உள்ளனர்.
மாணவி தற்கொலை - கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்....!
Published on

நாகை,

நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் தனியார் கல்லூரியில் பிசியோதெரபி மாணவி கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கல்லூரி தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட உள்ளது

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து இன்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பாப்பக்கோவில் நாகை - கிழக்கு கடற்கரை சாலையில் மறித்து போராட்டம் நடத்தியதல் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில்,

பிசியோதெரபிஸ்ட் முதலாம் ஆண்டு மாணவி சுபாஷினி கல்விக்கட்டணம் கட்ட சொல்லி வகுப்பறை வாசலில் நிற்க வைத்து அசிங்கப்படுத்தியதில் மனமுடைந்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரை கைது செய்ய கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com