காவலர் தேர்வு பயிற்சி பெற்ற வந்த மாணவர்: மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

பயிற்சி மைய வளாகத்தில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பவர், கமலா புரம். கூட்டுச்சாலை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறை மற்றும் ராணுவத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இங்கு தற்போது 26 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

மின்சாரம்

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் சாருகேஷ் (20) என்பவர் இன்று காலை சுமார் 8 மணியளவில் பயிற்சி மைய வளாகத்தில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார் இதைக்கண்ட சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com