அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட சென்னை பள்ளி மாணவர்கள்

சென்னை விருகம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது, ஆவிச்சி உயர்நிலை பள்ளி.
அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட சென்னை பள்ளி மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்
Published on: 

சென்னை,

அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட சென்னை பள்ளி மாணவர்கள் சந்தித்தனர்.

ஆவிச்சி உயர்நிலை பள்ளி

சென்னை விருகம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது, ஆவிச்சி உயர்நிலை பள்ளி. தனது தந்தையின் நினைவாக 1963-ம் ஆண்டு இந்த பள்ளியை அவர் தொடங்கினார்.

முன்னாள் மாணவர்கள்

ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 1975-1976-ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அரை நூற்றாண்டுக்கு முன்பு மாணவ பருவத்தில் ஒன்றாக படித்தவர்கள், அதன்பிறகு பள்ளி மேல்நிலை கல்வியில் வெவ்வேறு பாடப்பிரிவுகள் எடுத்து படித்து, வெவ்வேறு பணிக்கு சென்று தற்போது ஓய்வும் பெற்றுவிட்டனர்.

50 ஆண்டு நிறைவு பொன்விழா

தற்போது, அவர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு பள்ளியின் 50 ஆண்டு நிறைவு பொன்விழாவில் நடைபெற்றது. ஓய்வு காலத்தில் வாழ்க்கையை பின்நோக்கி அசைபோட்டுக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்த அவர்கள், தாங்கள் படித்த பள்ளியை பார்த்தவுடன் மீண்டும் இளம் வயது மாணவர்கள் போல் துள்ளிக்குதித்தனர். ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு நலம் விசாரித்ததுடன், தற்போது வசிக்கும் இடத்தையும் கேட்டு தெரிந்துகொண்டனர்.

மெய்சிலிர்க்க செய்தது

50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டு கிளியாக இருந்தவர்கள், அதன்பிறகு எங்கோ பறந்து பிரிந்துபோய் இன்றைக்கு மீண்டும் ஒரே சரணாலயத்தில் ஒன்றிணைந்து இருக்கின்றனர். ஒவ்வொருவரும் கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டு பேசிக் கொண்டது காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.

X