மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்

பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்
மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் புகழிமலை சமணர்படுக்கை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், ராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர் சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல பட்டனர். இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொண்டனர் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண்ன் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com