சபரிமலைக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு?

மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
சபரிமலைக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு?
Published on: 

மதுரை,

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவரும், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதித்ததாக தெரிகிறது.

மேலும், தங்கள் குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X