

சென்னை,
அரசியல் ரீதியாக முக்கிய முடிவு எடுப்பதற்காக பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று பாமக தலைவா ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியாகளுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் ஜனவரி 25-இல் இணைய வழியில் நடைபெற உள்ளது. பாமக நிறுவனா ராமதாஸ், இளைஞரணித் தலைவா அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா. ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். நிர்வாகக் குழு உறுப்பினாகள், வன்னியா சங்கத் தலைவா பு.தா.அருள்மொழியும் கூட்டத்தில் பங்கேற்கின்றனா. ஜனவரி 9-இல் நடைபெற்ற பாமகவின் நிர்வாகக் குழு கூட்டத்தின் தொடாச்சியாக, வன்னியா இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பாமக நிர்வாக குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி நிர்வாக குழு கூட்டம் வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.