திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்- 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர்.
திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்- 3 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நேற்று பஸ்சில் வந்து இறங்கிய இரு கல்லூரி மாணவர்களிடேயே திடீர் மோதல் ஏற்பட்டது. பஸ்சையும் போகவிடாமல், பொதுமக்களையும் பஸ்சில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு செய்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்ராஜா போலீஸ் படையுடன் விரைந்து வந்தார். போலீசாரை பார்த்ததும் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து ஓடினார்கள்.தகராறில் ஈடுபட்ட 3 மாணவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களது பெற்றோரை வரவழைத்து, இனிமேல் தகராறு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று எழுதி வாங்கப்பட்டது. பின்னர் அந்த மாணவர்கள் எச்சரிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com