திருவட்டார் அருகே வடமாநில தொழிலாளி திடீர் சாவு; போலீசார் விசாரணை

திருவட்டார் அருகே வடமாநில தொழிலாளி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் அருகே வடமாநில தொழிலாளி திடீர் சாவு; போலீசார் விசாரணை
Published on

திருவட்டார், 

திருவட்டார் அருகே வடமாநில தொழிலாளி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

திக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜமணி (வயது53). இவர் திருவட்டார் அருகே உள்ள தோட்டவாரம் பெருங்கன்விளையில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இங்கு மேற்குவங்காளத்தைச் சேர்ந்த நித்தாய் மைத்தி (48) உள்பட 5 பேர் வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் செங்கல்சூளை அருகே உள்ள அறையில் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் தொழிலாளி நித்தாய் மைத்தி அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நித்தாய் மைத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com