வடமாநில தொழிலாளி திடீர் சாவு

பாணாவரம் அருகே வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
வடமாநில தொழிலாளி திடீர் சாவு
Published on

பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவர் நேற்று முன்தினம் சொந்த ஊரிலிருந்து சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த பணியாளர்கள் நெமிலி புன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com