தொழிலாளி திடீர் சாவு

தக்கோலம் அருகே தொழிலாளி திடீர் என இறந்தார்.
தொழிலாளி திடீர் சாவு
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த கடம்பநல்லூர் பகுதியை சர்ந்தவர் வேலு (வயது 34), கூலித் தொழிலாளி. இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com