தனியார் நிறுவனத்தில் தொழிலாளி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்

சோளிங்கர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். உடலை பெற மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனத்தில் தொழிலாளி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்
Published on

சோளிங்கர்

சோளிங்கர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.. உடலை பெற மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோபால் (வயது 57). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல நிறுவனத்தில் பணியில் ஈடபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனேவே கோபால் இறந்து விட்டதாக கூறினர்.

இந்த நிலையில் கணவரின் வேலையை தனது மகனுக்கு வழங்கக்கோரி கோபாலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் பேசியபோது கோபாலின் வேலையை வேலையை அவரது மகனுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை போலீசார் தெரிவித்தவுடன் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு இறுதிச்சடங்கு செய்ய உடலை பெற்றுக்கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com