காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் உள்ள கோப்புகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பான கருத்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்; மக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com