கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சென்னை உயாநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு வந்தால்தான் குணப்படுத்த முடியும். முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com